திருமணத்தால் பிசியாகி விட்டேன்… மலையேற்றத்தில் ஈடுபட்ட 62 வயது பெண்ணின் மாஸ் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு அவர்களுடைய இயல்பு வாழ்க்கையே மாறிவிடுகிறது. இதில் சிலர் கனவுகளையும் தொலைத்து விடுகின்றனர். அப்படி 40 வருட திருமண வாழ்க்கையில் தனது கனவை தொலைத்துவிட்ட பெண் ஒருவர் 62 வயதில் மலையேற்றத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பெங்களூருவை சேர்ந்தவர் நாகரத்தினம்மாள். இவருக்கு சிறு வயது முதலே மலையேற்றத்தில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு சமூகப் பார்வைக்கு அஞ்சி அதை மறந்தே விட்டிருக்கிறார். ஆனால் தற்போது மீண்டும் மகன் மற்றும் அவர்களுடைய நண்பர்களுடன் இணைந்து நாகரத்தினம்மாள் மலையேற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
மலையேற்றத்திற்கு ஏற்ப வசதியான உடையைகூட உடுத்திக் கொள்ளாத நாகரத்தினம்மாள் சேலையுடுத்திய படியே இளைஞர்களுடன் ஈடுகொடுத்து மலையேறி இருக்கிறார். அகஸ்தியர் கூடம் எனப்படும் சஹ்யாத்ரி மலைத்தொடரில் கிட்டத்தட்ட 1,868 மீட்டர் அதாவது 6,129 அடி உயரமுள்ள மலையை கயிற்றைப் பிடித்தபடியே கடந்திருக்கிறார்.
62 வயதில் நாகரத்தினம்மாளுக்கு இருக்கும் உத்வேகம் தன் கனவு மீதான ஆசை பார்ப்பவர்களை தற்போது ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments