ஹவுஸ்புல்லான அதிகாலை காட்சிகள்: மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்ட மணிரத்னம்

  • IndiaGlitz, [Thursday,September 27 2018]

கோலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களின் வசம் சென்றுவிட்டது. இளம் இயக்குனர்களின் வித்தியாசமான படைப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீனியர் இயக்குனர் ஓய்வெடுக்க தொடங்கிவிட்டனர். ஆனால் இளம் இயக்குனர்களுக்கு இணையாக இன்றும் திரைப்படங்கள் வழங்கி வரும் ஒரே இயக்குனர் மணிரத்னம் மட்டுமே.

இதனால் இன்று அவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சிம்பு , விஜய்சேதுபதி போன்ற பெரிய ஸ்டார்கள் ஒருபக்கம் என்றால் இன்னும் மணிரத்னம் படத்திற்கு என ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்பது இன்றைய அதிகாலை காட்சி ஹவுஸ்புல் ஆனதில் இருந்து தெரியவருகிறது.

இன்று வெளியாகியுள்ள 'செக்க சிவந்த வானம் திரைப்படம் 61 திரையரங்குகளில் அதிகாலை 5 மணி காட்சி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் காட்சி முடிந்தவுடன் படத்தின் ரிசல்ட்டும் பாசிட்டிவ்வாக வந்துள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். எனவே 'காற்று வெளியிடை' படத்தில் சறுக்கிய மணிரத்னம் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

More News

நான் இருந்திருந்தால் ஒரு கொலையே பண்ணியிருப்பேன்: மகத்

பிக்பாஸ் வீட்டில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நால்வர் மட்டுமே இருப்பதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கருதி தினமும் இரண்டு பேர் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

கள்ளக்காதல் கிரிமினல் குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருமணத்திற்கு பின்னர் மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால் அது கிரிமினல் குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.

உப்பு, சர்க்கரையை ரேசன் கடையில் விற்க வேண்டாம்: பிரபல நடிகை கோரிக்கை

ஏழை எளிய மக்கள் அரிசி, சர்க்கரை ஆகியவற்றை ரேசன் கடையில் இருந்தே வாங்கி வரும் நிலையில் ரேசன் கடையில் வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு ஆகியவற்றை விற்பனை செய்ய வேண்டாம்

சூப்பர் ஸ்டார் படத்தை புரமோஷன் செய்த கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை வரும் ஞாயிறு அன்று முடிக்கவுள்ளதால் வெகுவிரைவில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார்

அப்பல்லோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதி

திமுக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.