அப்போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்? மணிரத்னத்திற்கு கங்கனா ரனாவத் கேள்வி

சமீபத்தில் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதத்தை தங்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தனர். அந்த கடிதத்தில் ஜெய் ஸ்ரீராம் என்பதை ஆயுதமாக்கி, போர் முழக்கமிட்டு, சிறுபான்மையினர்களை சிலர் தாக்கி வருவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மோடிக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்களுக்கு 62 பிரபலங்கள் பதில் கடிதம் எழுதி அதனை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் 'இந்தியாவில் நக்சலைட் தாக்குதல், தீவிரவாதிகள் தாக்குதல், காஷ்மீரில் பள்ளிகளைக் கொளுத்தும் தாக்குதல் ஆகியவை நடந்தபோது அந்த 49 பேர்களும் மவுனம் காத்தது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ஜெய் ஸ்ரீராம் என்னும் முழக்கமிடும் பக்தர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை என்றும், அரசியல் சார்புடன் 49 பிரபலங்கள் நடந்துகொண்டதாகவும் 62 பிரபலங்களின் கடிதத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 62 பிரபலங்களில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

விஜய்சேதுபதிக்கு இலங்கை தமிழர்கள் எதிர்ப்பா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கணவனின் கள்ளக்காதலி வீட்டிற்குள் நுழைந்து செருப்படி கொடுத்த மனைவி

தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கள்ளக்காதலி இருப்பது தெரிந்தவுடன் கணவரின் கள்ளக்காதலி வீட்டில் புகுந்து கள்ளக்காதலியையும்

இறங்கி அடிச்ச சாக்சி: அதிர்ச்சியில் மீராமிதுன்

இடுப்பை பிடித்ததாக சேரன் மீது குற்றஞ்சாட்டி மலிவான விளம்பரம் தேட முயற்சித்த மீராமிதுன் மீது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கடுப்பாகியுள்ளனர்.

யூடியூப் பார்த்து ஏடிஎம் கொள்ளையை கற்று கொண்டேன்:கைதான குற்றவாளி பேட்டி 

சென்னை அயனாவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தில் போலி ஏடிஎம் கார்டு மூலம் லட்சக்கணக்கில் பணத்தை திருடிய இர்பான் என்பவரை போலீசார் கைது செய்தனர்

சாதி சண்டையை மூட்டுவதே பா.ரஞ்சித்தின் திட்டம்: எச்.ராஜா 

ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து கூறிய ரஞ்சித், 'ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால்