6000 புத்தகங்கள்..... ஜானகி அம்மாள் வியந்த எம்.ஜி. ஆர் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜேஷ் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1979ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படத்தில் அறிமுகமானவர். நெறியாளராகவும், பிரபல யூடுயுபராகவும் அறியப்படுபவர். கை ரேகை ஜோசியத்தில் அதீத ஆர்வம் கொண்டவர். சித்தாந்தவாதி என பன்முகம் கொண்டவர்.
Indiaglitz ன் Home Tour நிகழ்ச்சியில் நடிகர் திரு. ராஜேஷ் அவர் வீடு குறித்தும், தான் சேர்த்து வைத்துள்ள பொருட்கள் குறித்தும் பிரமிப்போடு விளக்குகிறார்.
அப்படி என்னவெல்லாம் இருக்கு அந்த வீட்டில, அவர் சொல்றத நீங்களே கேளுங்க மக்களே ........
எனது நூலகத்தில் ஆறாயிரம் புத்தங்கள் உள்ளது. சினிமா குறித்த புத்தகங்கள் மட்டும் சுமார் 1500 புத்தகங்கள் இருக்கும்.
மக்கள் திலகம் முகம் முழுவதும் புன்னகை கொண்டிருக்கும் அரிய வகை புகைப்படம் என்னிடம் மட்டும்தான் உள்ளது. எம்.ஜி. ஆர் அவர்களின் மனைவி ஜானாகி அம்மாள்கூட இந்த படத்தை பார்த்து வியந்தார்.
Imagination is more important than Knowledge அப்டிங்குற பழமொழி பொறித்த ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் படம் கனடாவில் வாங்கியது. எனக்கு ஐன்ஸ்ட்டின் ஐ ரொம்ப பிடிக்கும்.
என் சொந்தகாரக்கார பெண்ணைத்தான் திருமணம் செய்துகொண்டேன். எனது வேகத்திற்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை. என் திருமண வாழ்வு அவளோடு 29 ஆண்டுதான் நீடித்தது. அவர் இறந்துவிட்டார்.
கிறிஸ்த்துவத்தில் The Last Supper உள்ளது போல், இந்த புகைப்படம் தி லாஸ்ட் டின்னர் , எம்.ஜி. ஆரும் கலைஞரும் பிரிவதற்கு முன் எடுத்த கடைசி படம்.
இது போன்ற பல விஷயங்களை நடிகர் ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com