வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 600 கிலோ புகையிலைப் பொருட்கள்! கேரளாவிற்கு கடத்தலா???
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னியாக்குமரி பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை, குளச்சல், நாகர்கோவில் போன்ற பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை செய்தபோது ஒரு வீட்டில் இருந்து 600 கிலோ புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக களியக்காவிளை பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 600 கிலோ புகையிலைப் பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டு பின்பு கேரளாவிற்கு போக்குவரத்து வாகனங்கள் மூலம் கடத்தப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அரசால் தடை செய்யப்பட்ட இதுபோன்ற பொருட்கள் கன்னியாகுமரி பகுதிகளில் அதிகம் புழங்குவதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர். சேமியா பாக்கெட்டுகளுக்குப் பின் மறைத்து வைக்கப்பட்ட புகையிலைப் பொருட்கள், சமையல் பொருட்களுடன் சேர்த்து கேரளாவிற்கு கடத்தப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய டிராவல்ஸ் உரிமையாளர் அன்வரை கைது செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout