வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 600 கிலோ புகையிலைப் பொருட்கள்! கேரளாவிற்கு கடத்தலா???

  • IndiaGlitz, [Friday,October 09 2020]

 

கன்னியாக்குமரி பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை, குளச்சல், நாகர்கோவில் போன்ற பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை செய்தபோது ஒரு வீட்டில் இருந்து 600 கிலோ புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக களியக்காவிளை பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 600 கிலோ புகையிலைப் பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டு பின்பு கேரளாவிற்கு போக்குவரத்து வாகனங்கள் மூலம் கடத்தப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அரசால் தடை செய்யப்பட்ட இதுபோன்ற பொருட்கள் கன்னியாகுமரி பகுதிகளில் அதிகம் புழங்குவதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர். சேமியா பாக்கெட்டுகளுக்குப் பின் மறைத்து வைக்கப்பட்ட புகையிலைப் பொருட்கள், சமையல் பொருட்களுடன் சேர்த்து கேரளாவிற்கு கடத்தப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய டிராவல்ஸ் உரிமையாளர் அன்வரை கைது செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

கேதார் ஜாதவ் விஷயத்தில் எல்லை மீறுகிறோம்: 'மாஸ்டர்' நடிகர் டுவீட்

நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் 12 பந்துகளில் 7 ரன்கள் என ஆமை வேகத்தில் ரன் எடுத்த கேதார் ஜாதவ் தான் சென்னை தோல்விக்கு காரணம்

முகநூலில் காதல்: 13 வயது பள்ளிச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

கிருஷ்ணகிரியை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுமி ஒருவர் முகநூலில் சாட்டிங்கில் மூழ்கி வாலிபர் ஒருவரை காதலித்ததை அடுத்து அவருக்கு நேர்ந்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சூரியிடம் ரூ.2.7 கோடி மோசடி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு

நிலம் வாங்கி தருவதாக நடிகர் சூரியிடம் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்த தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ரேகா- சனம் ஷெட்டி திடீர் மோதல்: கேப்டன் ரம்யாவின் பரிதாபம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் சண்டையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது மேலும் ஒரு சண்டை புதிதாக தோன்றியுள்ளது

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கும் தேதி இதுவா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ்