60 வயது நடிகருக்கு 4வது திருமணம்.. 44 வயது நடிகையை மணந்தார்..!

  • IndiaGlitz, [Friday,March 10 2023]

60 வயதில் நடிகர் ஒருவர் 44 வயது நடிகை திருமணம் செய்து கொண்டார் என்பதும் நடிகருக்கு இது நான்காவது திருமணம் என்பதும், நடிகைக்கு இது இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் பாபு. இவர் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை பவித்ரா லோகேஷ் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. மேலும் இருவரும் லிப்கிஸ் கொடுத்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து தங்களது உறவை பகிரங்கப்படுத்தினர்.

இந்த நிலையில் நரேஷ் பாபு மற்றும் பவித்ரா லோகேஷ் இன்று திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த திருமணத்திற்கு இரு தரப்பின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகர் நரேஷ் பாபுவுக்கு இது நான்காவது திருமணம் ஆகும். ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆகி அவர் விவாகரத்து பெற்றுள்ளார். அதேபோல் நடிகை பவித்ரா லோகேஷ் 2007 ஆம் ஆண்டு சுரேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது அவர் இரண்டாவது திருமணம் செய்து உள்ளார்.