ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Thursday,September 30 2021]

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு, இழுத்து மூடப்பட்டிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலைதாக்கம் சற்று குறைந்ததையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் ஒடிசாவில் 1-8 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெங்களூரு நகரில் உள்ள தனியார் விடுதி பள்ளியொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து அந்த விடுதியில் உள்ள மற்ற 400 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். அந்தப் பரிசோதனையில் கிட்டத்தட்ட 60 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும் விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதே விடுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே கடும் பதற்றம் ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஏஆர் ரஹ்மான் பின்னணி இசை, அந்த அரபிக்கடலோரம்: ஷிவானியின் கிளாமர் வீடியோ!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் 'அந்த அரபிக்கடலோரம்' என்ற பாடலின் பின்னணி இசையில் ஷிவானி நாராயணன் பீச் கிளாமர் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள

நிறைவடையும் நிலையில் தனுஷின் 'மாறன்': வைரல் புகைப்படம்!

தனுஷ் நடிப்பில், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாறன்'. தனுஷ் 43வது திரைப்படமான இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

தோழியுடன் புதிய காரில் விஜய் டிவி ஜாக்குலின்: வைரல் புகைப்படம்!

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமாகி அதன் பின்னர் 'தேன்மொழி' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் ஜாக்லின்

'வலிமை'க்கு அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த போனிகபூர்!

இந்த நிலையில் 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த நிலையில் அவர் தயாரித்த இன்னொரு திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்.

'வலிமை'யைவிட இரண்டு மடங்கு மாஸ்: 'தல 61' படம் குறித்து போனிகபூர்!

தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.