வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியக் கனவு? லாட்டரில் 637 கோடி பரிசு!
- IndiaGlitz, [Thursday,January 28 2021]
கனடாவில் உள்ள ஒரு ஏழை தம்பதிகளுக்கு லாட்டரியில் 60 மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்து இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.637 கோடி. லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட ஒரு பெண்மணி கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவனின் கனவில் வந்த ஒரு எண்ணையே தொடர்ந்து வாங்கி வந்து இருக்கிறார். இந்த எண் எப்படியும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துவிடும் என்று நம்பிய அந்தப் பெண்மணிக்கு தற்போது மெகா பரிசுத் தொகை விழுந்து இருக்கிறது.
டெம் பிரவடவுடம் எனும் 57 வயது பெண்மணி தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தைக் கொண்டு இருக்கிறார். காரணம் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இவருடைய கணவரின் கனவில் ஒரு எண் வந்ததாம். அந்த எண்ணை அதிர்ஷ்டமாக நம்பிய இவர் தற்போது பல கோடிகளுக்கு அதிபதியாகி இருக்கிறார். 2 குழந்தைகளைக் கொண்ட இவர் கொரோனா நேரத்தில் வேலையையும் இழந்து இருக்கிறார். ஒருநாள் தன்னுடைய அனைத்து பில்களையும் கட்டுவதற்காக வங்கிக்கு சென்ற இவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
காரணம் வீட்டில் இருந்த டெம்மின் கணவர் வெட்டியாக இருந்த சமயத்தில் லாட்டரி சீட்டுகளை எல்லாம் எடுத்து அதை சரிப்பார்த்து இருக்கிறார். அப்படி பார்த்த ஒரு சீட்டுக்கு 60 மில்லியன் டாலர் பரிசுத் தொகை விழுந்து இருக்கிறது. இதை உடனே தன்னுடைய மனைவிக்கு தெரிவித்து இருக்கிறார். கடந்த 40 வருடங்களாக பொதுச் சுகாதார ஊழியர்களாக பணியாற்றி வரும் இந்தத் தம்பதி வாழ்க்கையில் ஒரு பெரிய நிம்மதியையே அடைந்து விட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து கனவில் வரும் விஷயங்கள் எல்லாம் உண்மையில் நடந்து விடுமா என்ற கேள்வி எழலாம். உண்மையில் ஆழ்மனம் என்ன விரும்புகிறதோ அதைத்தான் கனவுகள் பிரதிபலிக்கின்றன என்று சைக்கலாஜி நிபுணர்கள் கூறுகின்றனர். கனவில் என்றைக்காவது ஒரு அதிர்ஷ்டம் அடித்து விடதா? வாழ்க்கையில் நிம்மதி அடைந்து விடமாட்டோமா என விரும்பிய டெம்மின் கணவர் வாழ்க்கை தற்போது பூர்த்தியாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.