கல்வான் தாக்குதலில் 60 சீன வீரர்கள் உயிரிழப்பா?? விறுவிறுப்பான தகவல்!!!

 

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கலவான் மலை பள்ளத்தாக்கில் கடந்த ஜுன் 15 ஆம் தேதி சீன இராணுவ வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால் இந்திய மற்றும் சீன இராணுவ வீரர்களிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. இந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகவலை இந்திய இராணுவம் உறுதிப்படுத்தியது. அதைப்போல சீனாவின் சார்பாக பலரும் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்பட்டாலும் தெளிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை.

முதற்கட்டமாக அமெரிக்க ஊடகங்கள் கல்வான் தாக்குதலில் 40-45 சீன இராணுவ வீரர்கள் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறியிருந்தது. ஆனால் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தகவலை உறுதிப் படுத்தவில்லை. மேலும் இறந்த வீரர்களுக்கு உரிய இராணுவ மரியாதையோடு அடக்கம் செய்யப் பட்டதாகக்கூட எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது கல்வான் தாக்குதலில் 60 இராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டனர் என்ற தகவலை நியூஸ் வீக்ஸ் என்ற அமெரிக்க பத்திரிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தத் தகவலால் கடும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜி ஜின்பிங் கடந்த 2012 நவம்பரில் அந்நாட்டின் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஆனார். அதில் இருந்து சீனாவின் துருப்புகள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறுவதைத் தொடர்ந்து வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவிற்கும் சீனாவிற்குமான நட்புறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா நேரத்தில் இந்தியா எல்லைப் பகுதியில் கட்டமைப்புகளை மேற்கொள்கிறது என்பதைக் காரணமாகக் காட்டி முதலில் சீன இராணுவ வீரர்கள் கடந்த மே மாதம் அத்துமீறலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து இருநாட்டு இராணுவ உயர் அதிகாரிகளும் கடுமையான பேச்சு வார்தையில் ஈடுபட்டனர்.

ஜுன் 6 ஆம் தேதி பேச்சுவார்தையில் உடன்பாடுகள் எட்டப்பட்ட நிலையிலும் ஜுன் 15 ஆம் தேதி சீன இராணுவ வீரர்கள் எல்லையில் அத்துமீறி கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இரு தரப்பினருக்குமே பாதிப்புகள் ஏற்பட்டபோதும் சீனா தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குறித்து வெளியுலகிற்குத் தெரியப்படுத்த வில்லை. மேலும் எல்லைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதலை இப்போதும் நடத்தி வருகிறது. இதனால் தற்போது லடாக் எல்லைப் பகுதியில் கடுமையான பதட்டம் நிலவிவருகிறது.

கடந்த 4 நாட்களாக லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் 200 மீட்டர் தொலைவில் இருநாட்டு இராணுவ வீரர்களும் குவிக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க ஊடகம் கல்வான் தாக்குதலில் சீனாவின் தரப்பில் 60 இராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டனர் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது. நியூஸ் வீக்ஸ் இத்தகவலை ஜனநாயக பாதுகாப்புக்கான அறக்கட்டளையைச் சேர்ந்த கிளியோ பாஸ்கலை மேற்கோள் காட்டி வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதில் “கடந்த மே மாதத்திலேயே சீனாவின் வினோதமான நடவடிக்கைகள் குறித்து ரஷ்யா இந்தியாவிடம் கூறியது. சீனா ஏற்கனவே திபெத் பகுதியில் பயிற்சிகளை நடத்தி வந்தது என ரஷ்யா கூறியிருந்தது. அந்நிலையில் தான் ஜுன் 15 அன்று கல்வானில் இருநாட்டு படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளுக்கும் இடையே 45 ஆண்டுகளில் முதன் முதலாக நடந்த மோதல் சம்பவமாகும் இது” என குறிப்பிட்டு இருக்கிறது.

 

More News

கொரோனா சிகிச்சை மையத்தில் இளம்பெண் கற்பழிப்பு… ஊழியரே செய்த கொடூரம்!!!

மும்பையில் கொரோனா அறிகுறியோடு சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணை அங்குள்ள சிகிச்சை மையத்தில் பணியாற்றிய ஊழியரே கற்பழித்த கொடூரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

ரெட் ஹேர், டோண்ட் கேர்: ஷிவானியின் எதுகை மோனை கவர்ச்சிப்பதிவு!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஷிவானி நாராயணன் இந்த கொரோனா ஊரடங்கு காலமான ஐந்து மாதத்தில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்கள்

மற்றவர்களை விட ரிச்சாக வாழ வேண்டுமா? பிக்பாஸ் நடிகையின் அறிவுரை!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் சீசன் 3' போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்: புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!

சமீபத்தில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் பாரதிராஜாவின் முயற்சியால் தொடங்கப்பட்டது.

பேனர் வைக்கும்போது ரசிகர்கள் இறந்தால், சினிமாவுக்கு தடை செய்யலாமா? சூர்யாவுக்கு பிக்பாஸ் நடிகை கேள்வி!

நீட் தேர்வு குறித்து நேற்று நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும்