6 வயது சிறுவன் 11 லட்சத்துக்கு கேம் விளையாடிய சம்பவம்… Ipad வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவா சிறுவர்களிடம் செல்போனைக் கொடுத்தால் யாருக்காவது போன் செய்து விடுவார்கள், அல்லது தேவையில்லாத தளங்களுக்கு சென்று எதையாவது பார்த்து விடுவார்கள் எனப் பயந்து சில பெற்றோர்கள், சிறுவர்களுக்கு என்றே தனியாக ஐபேட் வாங்கி வைத்து விடுகின்றனர். காரணம் ஐபேடில் குறிப்பிட்ட விளையாட்டை மட்டும் விளையாடுவதற்கு ஏற்றமாதிரி செட்டிங்ஸை மாற்றி வைத்து விடலாம். அல்லது இணைய வசதியே இல்லாமல் கூட சில கேம்களை மட்டும் ஏற்றி வைத்து விடலாம். இப்படி எத்தனையோ முன்னேற்பாடான செட்டிங்ஸ் வசதிகள் ஐபேடில் இருக்கிறது.
ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு 6 வயது சிறுவன் அவனுடைய அம்மாவின் ஐபேடில் இருந்து 11 லட்சத்துக்கு பூட்ஸ்பேக் ரீசார்ச் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெஸ்ஸிகா ஜான்சன்(41) என்பவரின் ஐபேடில் இருந்து அவருடைய மகன் ஜார்ஜ்(6) சோனிக் ஃபோர்சஸ் எனும் ஆன்லைன் கேமை விளையாடி இருக்கிறார். இந்த கேமில் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு போக Red ring, gold ring எனப் பல பூஸ்டர்கள் தேவைப்படுகிறது. இந்த பூஸ்டரைப் பெறுவதற்காக அச்சிறுவன் தொடர்ந்து தன்னுடைய அம்மாவின் கிரெடிட் கார்டில் இருந்து ரிசார்ஜ் செய்து இருக்கிறான்.
ஐபேடில் இருந்த செட்டிங்ஸ் அனைத்தும் Automatic மோடில் இருந்ததால் தொடர்ந்து 16,000 டாலர்களுக்கு (11 லட்சம்) பூஸ்டர் பேக்குகள் ரிசார்ஸ் ஆகி இருக்கிறது. இதை கவனித்த ஜெஸ்ஸிகாவிற்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு உடனே வங்கிக்கு தொடர்பு கொண்டு இருக்கிறார். மேலும் தன்னுடைய கிரெடிட் கார்டை ஹேக்கர்கள், ஹேக் செய்து விட்டனர் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். இந்நிலையில் ஜெஸ்ஸிகாவின் கிரெட்டிட் கார்டை ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள் இது ஹேக்கர்களின் வேலையல்ல. சோனிக் ஃபோர்சஸ் எனும் கேமிற்கு செய்த ரிசார்ஜ்கள் எனத் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனால் மேலும் அதிர்ந்து போன ஜெஸ்ஸிகா ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு என்னுடைய 6 வயது மகன் தெரியாமல் கேமிற்கு ரிசார்ஜ் செய்து விட்டான். என்னுடைய பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் ரிசார்ஜ்கள் செய்யப்பட்டு 60 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என ஆப்பிள் நிறுவனமும் கைவிரித்து இருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ஜெஸ்ஸிகா உங்களது குழந்தைகளிடம் ஐபேட்டை கொடுப்பதற்கு முன்பு ஆன்லைன் கேம்கள், ரிசார்ஜ்கள் மற்றும் தேவையில்லாத தளங்களுக்கு செல்லமுடியாத வகையில் செட்டிங்ஸ்கள் அனைத்தையும் முடக்கிவிட்டு கொடுங்கள் என ஆலோசனை கூறி இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments