சென்னை பீனீக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்: மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10 முதல் 17 வரை சென்றவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் உள்ள மிகப் பெரிய மால்களில் ஒன்று வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மால். இந்த மாலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்த 6 பெண்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி கடந்த மார்ச் 10 முதல் 17 வரை அந்த மாலுக்கு சென்றவர்கள் அனைவரும் தங்களை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் குறித்த அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

தமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை விஜய்: பிரபல காமெடி நடிகை

தமிழ் சினிமாவின் காமெடி நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர் ஒருவருமான நடிகை ஆர்த்தி சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊரடங்கு உத்தரவை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை: மத்திய அரசு அதிரடி உத்தரவு 

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும்

கொரோனாவிற்கு எதிரான போர்: அள்ளிக்கொடுத்த திரையுலக பிரபலங்கள்

எந்த ஒரு இயற்கை பேரிடர் நாட்டிற்கு வந்தாலும் முதல் ஆளாக நிதி அளித்து நாட்டிற்கு தோள் கொடுப்பது திரையுலக பிரபலங்கள் தான். எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்து தற்போதைய காலம்

வெப்பம் அதிகமாக இருந்தா கொரோனா பரவாதா??? அறிஞர்கள் என்ன சொல்றாங்க???

ஆப்பிரிக்கா நாடுகளை பொறுத்தவரை, கொரோனா நோய்த்தொற்று குறைவான அளவில்தான் பாதித்து இருக்கிறது.

சிவகார்த்திகேயன் பட வசனத்தை சரியான நேரத்தில் ஞாபகம் செய்த கலெக்டர்

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது