கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை: ஆறு வார குழந்தை இறந்ததால் நாடே சோகம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவை விட தற்போது அமெரிக்காவில் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது

அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு முதல்முதலாக ஆறு வார குழந்தை ஒன்று பலியாகியுள்ளது அந்நாட்டினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த குழந்தை அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவிய அந்த் குழந்தை சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்தது. இதனையடுத்து கொரோனா வைரஸால் உலகிலேயே மிக இளவயது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அமெரிக்காவையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

More News

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் 6வது மாடியில் இருந்து குதிக்க முயற்சித்ததால் பரபரப்பு

டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்துகொண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரமல்ல இது: ஏ.ஆர்.ரஹ்மான்

டெல்லியில் சமீபத்தில் நடந்த மத வழிபாட்டுத் தலத்தில் கலந்துகொண்டவர்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்

பீச்சில் பார்ட்டி, கும்மாளம் அடித்த 70 மாணவ, மாணவிகள்: 44 பேர்களுக்கு பாசிட்டிவ்

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதற்கு அந்நாட்டினர்கள் பொறுப்பு இல்லாமல் இருப்பதே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வரும்

வெளியூரில் மாட்டிக்கொண்ட மகன்: தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூரில் மகன் மாட்டிக்கொண்டதால், மரணமடைந்த தந்தைக்கு அவரது மகளே இறுதிச் சடங்கு செய்த சோகமான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது 

கொரோனா குறைவான எண்ணிக்கையில் தப்பித்துக்கொண்ட நாடுகள்???  எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!!

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உலகச்சுகாதார நிறுவனத்தால் உலகச்சுகாதார நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா