வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வரும் நிலையில் கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களில் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா தொற்றின் தாக்கம் மிக அதிகமாகியிருக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் திரும்பிய 20 பேர்களுக்கும் கடலூர் சென்ற 7 பேர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோயம்பேடு பூக்கடையில் இருந்து பூக்கள் வாங்கி வந்து வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பூ விற்ற 6 பேர்களிடம் இருந்து எத்தனை பேர் பூ வாங்கியிருப்பார்கள்? அவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பரவியிருக்கும்? என்பதை நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடித்து வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனாவிடம் இருந்து தப்பிக்க முடியும் என்பதை சென்னையில் அனைத்து மக்களும் புரிந்து கொண்டால் மட்டுமே இன்னும் ஒருசில மாதங்கள் கழித்தாவது சென்னை கொரோனாவிடம் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments