வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வரும் நிலையில் கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களில் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா தொற்றின் தாக்கம் மிக அதிகமாகியிருக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் இருந்து சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் திரும்பிய 20 பேர்களுக்கும் கடலூர் சென்ற 7 பேர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோயம்பேடு பூக்கடையில் இருந்து பூக்கள் வாங்கி வந்து வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பூ விற்ற 6 பேர்களிடம் இருந்து எத்தனை பேர் பூ வாங்கியிருப்பார்கள்? அவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பரவியிருக்கும்? என்பதை நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடித்து வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனாவிடம் இருந்து தப்பிக்க முடியும் என்பதை சென்னையில் அனைத்து மக்களும் புரிந்து கொண்டால் மட்டுமே இன்னும் ஒருசில மாதங்கள் கழித்தாவது சென்னை கொரோனாவிடம் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற நபர் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது

அஜித் படத்தில் மீராமிதுன்: வெளிவராத தகவல்

தல அஜித் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு கோலிவுட் திரையுலகினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தல அஜித் குறித்த பிறந்த நாள் ஹேஷ்டேக் டுவிட்டரில் 11 மில்லியனுக்கும்

தமிழகத்தின் ஒரே ஒரு பச்சை மண்டலத்திலும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் அதாவது மே 3ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் நேற்று திடீரென மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது

பெற்றோரையும் டீச்சரையும் கைது செய்யுங்கள்: ஊரடங்கு நேரத்தில் சிறுவன் கொடுத்த புகார்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தன்னை தன்னுடைய பெற்றோரும் ஆசிரியரும் டியூஷன் போக சொல்லி கட்டாயப்படுத்தியதாக 5 வயது சிறுவன்

இந்தியாவில் 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 35,403ஆக இருந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 என அதிகரித்துள்ளது.