தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்வு: அமைச்சர் தகவல்

பல நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தியிருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேர்களை கொரோனா தாக்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனா பார்த்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனா தாக்கியவர்களில் இரண்டு பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் நியூசிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் 6 பேர்களும் வெளியிடங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் என்றும் சமூக நோய் தொற்றாக தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

மேலும் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஆறு பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த ஆறு பேரில் ஐந்து பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதும் ஒருவர் டெல்லியில் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிட்டுள்ளார்

More News

கொரோனா வைரஸ் எங்கிருந்து, எப்படி பரவியது??? சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆய்வுமுடிவு!!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா Covid-19 (novel), அறிவியல் குறியீட்டில் SARS-CoV-2 வைரஸ் பரவலுக்கு இதுவரை காரணம் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.

10 நிமிடத்துக்கு ஒருவர் பலி.. கொரோனாவால் திணறும் ஈரான்..!

ஈரான் நாட்டில்10 நிமிடத்திற்கு ஒருவர் கொரோனா தொற்றால் இறக்கிறார். 1 மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

ஜின் தயாரிப்பை நிறுத்திவிட்டு கைகழுவும் சானிடைசர் தயாரிக்கும் கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தனக்கு சொந்தமான மதுபான ஆலையில் மதுபானங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு கை கழுவும் சானிடைஸர்கள் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

இந்த நேரத்தில் பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல: ரித்விகா

கொரோனா குறித்த விழிப்புணர்வை கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை ரித்விகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா விழிப்புணர்வு குறித்த ரஜினியின் வீடியோ

கொரோனா வைரஸ் பீதியால் இந்தியாவே அச்சம் கொண்டிருக்கும் நிலையில் நாளை ஒரு நாள் சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்