1000ஐ தாண்டிய 6வது மண்டலம்: சென்னை மண்டலங்களின் கொரோனா நிலவரம்
- IndiaGlitz, [Thursday,May 28 2020]
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாகி கொண்டே உள்ள நிலையில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு கிடைக்கும் தளர்வுகள் எதுவுமே சென்னைக்கு மட்டும் கிடைக்காமல் உள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை மாநகராட்சி, சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னையில் மேலும் ஒரு மண்டலத்தில் பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது. அதுதான் அண்ணா நகர் மண்டலம்.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2252 பேர்களும், கோடம்பாகத்தில் 1559 பேர்களும், திருவிக நகரில் 1325 பேர்களும், தேனாம்பேட்டையில் 1317 பேர்களும், தண்டையார்பேட்டையில் 1262 பேர்களும் அண்ணாநகரில் 1046 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அம்பத்தூர், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மூன்று மண்டலங்களிலும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 9 மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இன்று காலை நிலவரப்படி சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் மொத்தம் 12,203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.