கொரோனா நேரத்தில் புது யுக்தியைப் பயன்படுத்தி காசை அள்ளும் இளைஞர்!!!
- IndiaGlitz, [Monday,December 21 2020]
புனேவில் 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்த இளைஞர் ஒருவர் கொரோனா நேரத்தில் டீ ஸ்டார்ப் அப் மூலம் லட்சக்கணக்கான பணத்தை மாதம்தோறும் அள்ளி வருகிறார். இவர் பயன்படுத்தும் பிசினஸ் டிரிக்ஸ் பலரையும் கவர்ந்து இருக்கிறது. 28 வயதான இளைஞர் அபிமன்யு. முதலில் ஒரு வாட்ச்மேனாக வேலைப் பார்த்து வந்திருக்கிறார்.
அடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்த அபிமன்யு சொந்தமாக ஒரு டீ கடையை வைத்திருக்கிறார். ஆனால் கொரோனோ ஊரடங்கு, நோய்ப் பரவல் பற்றிய அச்சத்தால் அவரது தொழில் படு தோல்வியில் முடிந்து இருக்கிறது. ஆனால் நிலைமையை மாற்ற நினைத்த அபிமன்யு கொரோனா பயத்தினால் அலுவலகம் மற்றும் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு இவராகவே இலவசமாக டீயை நேரில் கொண்டுபோய் கொடுத்து இருக்கிறார். இவரது மனித நேயத்தில் நெகிழ்ந்து போன பலர் அடுத்தடுத்து டீக்கு ஆர்டர் கொடுத்து இருக்கின்றனர்.
இதனால் தற்போது டீ க்கான ஆர்டரை ஆன்லைனில் எடுத்துக் கொள்கிறார். ஆர்டர் வந்தவுடன் வேலைக்கு அமர்த்தி இருக்கும் இளைஞர்களை வைத்து உடனடியாக டீயை சப்ளை செய்கிறார். பருவமழை மற்றும் கொரோனா நேரத்தில் இவருடைய உக்தி பலருக்கும் மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது. வாட்ச்மேனாக வெறும் 12 ஆயிரம் ரூபாயை சம்பாதித்துக் கொண்டு இருந்த அபிமன்யு இன்று ஒரு மாதத்தில் 2 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார். தனது வளர்ச்சியால் பல இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார். இந்நிலையில் அபிமன்யுவின் யுக்தி பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.