ஒரு குடும்பத்தில் 6 பேரை காவு வாங்கிய கொரோனா...! மனதை உருக்கும் சோக நிகழ்வு.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருப்பூரில் தன் நான்கு மகன்கள் இறந்ததை கேட்டு, அவர்களின் தாயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், குன்னத்தூர், வெள்ளிரவளி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாள்(70). இவருக்கு தங்கராஜ், 52, ராஜா, 50, சவுந்திரராஜன் 40 மற்றும் தெய்வராஜன் 45 என்ற நான்கு மகன்கள் உள்ள நிலையில், இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக தங்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். அண்மையில் கோவையில் உள்ள உறவினரின் வீட்டிற்கு துக்க நிகழ்வை விசாரிக்க சென்றுள்ளார் தெய்வராஜன். இதன் பின் வீடு திரும்பியவருக்கு, சில நாட்கள் கழித்து உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சோதித்து பார்த்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த மாதம் 9-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்குப்பின், மனைவி சாந்தாவிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட, அவரும் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதேபோல் இவரின் சகோதரர்கள் தங்கராஜ், ராஜா, சவுந்தரராஜன் உள்ளிட்ட மூவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட, சிகிச்சை பலனில்லாமல் இவர்களும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இவரின் தாய் பாப்பாள் என்பவர் வயதானவர் என்பதால், உறவினர்கள் மகன்கள் இறந்ததை அவரிடம் சொல்லவில்லை. மகன்கள் யாரும் தன்னை பார்க்கவில்லை'என்று சந்தேகம் கொண்ட பாப்பாள், உறவுக்காரர்களிடம் தொடர்ந்து தன் மகன்கள் குறித்து கேட்டுள்ளார். அப்போது 4 மகன்கள் மற்றும் 1 மருமகள் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த பாப்பாள் அன்று இரவே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரே வீட்டைச்சேர்ந்த தாய், மகன்கள், மருமகள் என 6 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டிற்குள்ளே பாதுக்காப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ரோனாவை கட்டுப்படுத்த அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com