கைதுசெய்யப்பட்ட கம்பியூட்டர் பாபா… நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகப் பரபரப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்தியப்பிரதேசத்தில் கம்பியூட்டர் பாபா எனப்படும் நாம்தேவ் தியாகி எனும் சாமியார் மிகவும் பிரபலமான மனிதராக இருந்து வருகிறார். சமீபத்தில் அம்மாநில அரசியலில் ஏற்பட்ட குழப்பங்களின்போது நாம்தேவ் தியாகி பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டார். முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அங்கு செயல்பட்டு வந்தது. அக்கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா தனது 22 எம்எல்ஏ ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால் ம.பியில் காங்கிரஸ் ஓரங்கட்டப்பட்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது.
22 எம்எல்ஏக்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த இடைத்தேர்தலின்போது நாம்தேவ் தியாகி பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் இவருக்கு 40 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய ஆசிரமம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜம்பூர்தி எனும் புறநகர் பகுதியில் இருக்கும் இந்த ஆசிரமத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலப்பகுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மத்திய பிரதேச அரசாங்கம் கையகப்படுத்த முடிவு செய்ததோடு நாம்தேவ் தியாகிக்கு ரூ. 2 ஆயிரத்தை அபராதமாக விதித்து இருக்கிறது. மேலும் இன்று ஆக்கிரமிப்பு பகுதிகள் கையகப்படுத்தப் படுவதால் பாபா நாம்தேவ் தியாகி மற்றும் அவருடைய தொண்டர்கள் 6 பேர் பாதுகாப்பு நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout