எனக்கு 600 கோடி இந்தியர்கள் ஓட்டு போட்டார்கள்: சுவிஸ் நாட்டில் உளறிய பிரதமர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அவர் பேசியபோது, தனக்கு 600 கோடி இந்தியர்கள் ஓட்டு போட்டதாக தவறுதலாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகையே சுமார் 120 கோடிதான். தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி இந்தியாவில் சுமார் 81 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இந்த நிலையில் தனக்கு 600 கோடி இந்தியர்கள் ஓட்டு போட்டதாக பிரதமர் உளறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
600 மில்லியன் அதாவது 60 கோடி என்பதற்கு பதிலாக அவர் 600 கோடி என தவறுதலாக பேசியதாக கூறப்படுகிறது. பிரதமரின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுவதோடு மீம்ஸ்களும் பதிவாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com