100ஐ நெருங்கிய ஒருநாள் பலி எண்ணிக்கை: கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பலி எண்ணிக்கை அதிகரிப்பால் பரபரப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 6000க்கும் அதிகமாக இருந்த நிலையில் இன்று 6000க்கும் குறைவான பாதிப்பே உள்ளதால் தமிழகம் மெல்ல மெல்ல கொரோனாவில் இருந்து மீண்டு வருவதாகவே கருதப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இன்றைய பலி எண்ணிக்கை அதிர்ச்சி அளித்துள்ளது.

சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 5864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,39,978 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,767 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 97 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3838 என்பதும குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5295 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,78,178 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 59,437 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

சிறுவர்கள் விளையாட வாங்கிய விசிலில் ஆபாச பிலிம்ரோல்: பெற்றோர்கள் அதிர்ச்சி!

சிறுவர்கள் விளையாட வாங்கிய விசிலில் ஆபாச ஃபிலிம் ரோல் இருந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆகஸ்ட் 12 இல் கொரோனா தடுப்பூசி???? வியப்பில் ஆழ்த்தும் ரஷ்யாவின் புது  அறிவிப்பு!!!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள Gamaleya Research Institute of Epidemiology and Microbiology என்ற ஆய்வு நிறுவனம் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளது

ஹர்திக் பாண்டே வெளியிட்ட குழந்தையின் புகைப்படம்: இணையதளங்களில் வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும் நடாஷா என்ற நடிகைக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

புதிய கல்விக்கொள்கை: குஷ்புவை அடுத்து கமல் ஆதரவு

மத்திய அரசு நேற்று அறிவித்த புதிய கல்வி கொள்கைக்கு பெரும்பாலானோர் வரவேற்பும் ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

சாதாரண சைக்கிளை வைத்து தண்டவாளத்தில் சாகசம்!!! ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு!!!

மிகப் பெரிய ரயில்வே போக்குவரத்துத் துறையைக் கொண்ட நாடு இந்தியா. பல்லாயிரக் கணக்கான பணியாளர்கள்