திடீரென 6000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் தமிழகம்

  • IndiaGlitz, [Wednesday,July 22 2020]

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக 5000ஐ நெருங்கிய நிலையில் இன்று திடீரென 5000ஐ தாண்டியது மட்டுமின்றி 6000ஐ நெருங்கியுள்ளதால் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 5849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1,171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,492 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89,561 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 74 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,700 என்பதும குறிப்பிடத்தக்கது. இதில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 இன்று சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,910 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,31,583 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 60,112 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'கந்தனுக்கு அரோகரா': ரஜினிக்கு நன்றி கூறிய தமிழக அமைச்சர்

கந்த சஷ்டி கவசம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்று காலை திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்தார்.

மகன் இல்லாத நேரத்தில் மருமகளிடம் சில்மிஷம் செய்த மாமனார்: மருமகள் எடுத்த அதிரடி முடிவு

மகன் இல்லாத நேரத்தில் மருமகளிடம் பாலியல் தொந்தரவு செய்த மாமனார் ஒருவர் மீது மருமகள் காவல் துறையில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரேம்ஜி படத்தின் நாயகியாகும் பிக்பாஸ்-தமிழ் நடிகை: டைட்டில் அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்தும் இசையமைத்து வரும் நிலையில் தற்போது அவர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு

தடை செய்யப்பட்ட ஆப்களை பயன்படுத்தினால் …. எச்சரிக்கை விடுக்கும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்!!!

இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் ஊறுவிளைவிக்கும் விதமாக சீன செயலிகள் செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டி மத்திய அரசு கடந்த ஜுன் 29 ஆம் தேதி 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்தது

கர்ப்பமாகி ஒரே மணி நேரத்தில் குழந்தை பெற்ற பெண்: ஆச்சரியத்தில் உறவினர்கள்

கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்ற அதிசய சம்பவம் அவரது உறவினர்களை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது