கோயம்பேடால் குவிந்த கொரோனா நோயாளிகள்: இன்று 580 பேர்களுக்கு பாதிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கு மேல் இருந்து வரும் நிலையில் இன்றும் ஐநூறுக்கும் மேல் அதாவது 580 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் இன்று 580 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,409 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 580 பெயர்களில் 316 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னையில் 2644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
சென்னையை அடுத்து திருவள்ளூரில் 63 பேர்களும், விழுப்புரத்தில் 45 பேர்களும், பெரம்பலூரில் 33 பேர்களும் அரியலூரில் 24 பேர்களும், கடலூரில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 14,195 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து 2,02,436 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இன்று கொரோனாவால் 31 பேர் குணமாகி உள்ளதாகவும் இதனை அடுத்து 1,547 பேர் கொரோனாவில் இருந்து மொத்தம் குணமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், இதனையடுத்து தமிழகத்தின் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 37 என்பதும் குறிப்பிடத்தக்கது
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புடையவர் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments