இந்தியாவில் 24 மணி நேரத்தில் 540 பாசிட்டிவ்கள்: மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர்கள் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,835லிருந்து 14,378ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 452லிருந்து 480ஆக உயர்ந்துள்ளது என்பதும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,767லிருந்து 1,992ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதேபோல் உலகளவில் 22,26,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 5,63,670 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், உலகளவில் 1,50,597 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 7,09,735ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை 37,154ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.