54 வயதில் திருமணமா? பிரபல தமிழ் நடிகர் விளக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,August 17 2022]

54 வயதான பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம் என ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த செய்திக்கு அந்த நடிகர் விளக்கமளித்துள்ளார்.

அஜித் நடித்த ’வாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. அதன்பிறகு இவர் பல திரைப்படங்களை இயக்கினார் என்பதும் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு திருமணம் என்றும் அவருக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. 54 வயதாகும் எஸ்ஜே சூர்யா திருமணமா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் திருமணம் பற்றி நான் சிந்திக்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் இப்போதைக்கு எனது முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.