இன்று தமிழகத்தில் 54 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்! சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் சராசரியாக தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று 54 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1683ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 பேர்களில் 27 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் மட்டும் 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று மட்டும் 90 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை 752 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 6,954 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 65,977 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் இருவர் கொரோனாவால் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

More News

சானிடைசர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் அல்லது சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்றும் அரசும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களிடம்

மனிதக்கடவுள் டாக்டர்களுக்காக சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நன்றி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வரும் மனிதக்கடவுள் டாக்டர்களுக்கு பலரும் பலவிதமான நன்றி கூறி வரும்

தக்க சமயத்தில் WHO விற்கு கைக்கொடுக்கும் சீனா!!! கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் நன்கொடை!!!

கொரோனா பணிகளுக்காக, உலக சுகாதார அமைப்பிற்கு கூடுதலாக 30 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக சீனா அரசு வழங்க இருக்கிறது

ஜோதிகா ஏன் அப்படி பேசினார்? விளக்கம் அளிக்கும் இயக்குனர்

சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கூறியதாக இணையதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

கொரோனா தடுப்பு பணியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனைவி: வைரலாகும் புகைப்படம்

இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து நடந்து வரும் போரில் தன்னலம் கருதாது மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், தூய்மைப்பணியாளர்கள்