close
Choose your channels

சென்னையில் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?

Monday, May 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536 என சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அறிவித்துள்ளார். ஒதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,760ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 536 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 364 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7114 என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 234 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும், கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 4,406 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment