தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3550 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் இதுவரை 31 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று 30 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 1409ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 12,863 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தமிழகத்தில் மொத்தம் 153,489 பேர்களுக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 527 பேர்களில் 308 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை அதிகபட்சமாக 100, 200 என்றே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதால் அரசும் மக்களும் சுதாரிக்க வேண்டிய நேரமிது என்றே கருதப்படுகிறது

More News

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.9 கோடி வழங்கிய பிரபல திரைப்பட கதாசிரியர்!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு துறையினர் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? முக்கிய தகவல்

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24 ஆம் தேதியே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்

அசாம் மாநிலத்தில் பரவிவரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!!! கொத்துக் கொத்தாக செத்து மடியும் பன்றிகள்!!!

இந்தியாவில் ஆப்பிக்கப் பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று முன்னெப்போதும் பரவாத நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் இது: கமல்ஹாசன் ஆவேசம்

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார் என்பதும் இந்த கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா எண்ணிக்கை!!! காரணம் இதுதான்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது.