அட்சய திருதியை தினத்தில் காது குத்திய 52 வயது காமெடி நடிகர்.. கடா விருந்து எப்போது?

  • IndiaGlitz, [Saturday,May 11 2024]

நேற்று அட்சய திருதியை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் 52 வயது காமெடி நடிகர் ஒருவர் காது குத்திய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று அட்சய திருதியை முன்னிட்டு ஏழை எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் வரை அவர்களால் முடிந்த அளவு தங்கத்தை வாங்கினார்கள் என்பதும் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிற்கு தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல திரை உலக பிரபலங்களும் நேற்றைய அட்சய திருதியை தினத்தில் தங்க நகை வாங்கியதாக கூறப்படும் நிலையில் காமெடி நடிகர் கிங் காங் நேற்று நகைக்கடைக்கு சென்று காது குத்தி கடுக்கன் போட்டுக் கொண்ட வீடியோவை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அட்சய திருதியை முன்னிட்டு ’இன்று காது குத்தினேன், கடுக்கன் அணிந்து கொண்டேன்’ என்ற கேப்ஷனுடன் அவர் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏராளமான திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் கிங்காங் மகள் சக்தி பிரியா சமீபத்தில் தான் பிளஸ் டூ தேர்வில் 404 மதிப்பெண் எடுத்தார் என்று செய்தி வெளியான நிலையில் தற்போது காது குத்திய வீடியோவையும் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அது மட்டுமின்றி பொதுவாக காது குத்தினால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கடா விருந்து வைப்பார்கள் என்ற நிலையில் அடுத்த வாரம் அவர் கடா விருந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.