50 கிராம் பொங்கல் எப்படி 220 கிராமாக மாறும்??? ரயில்வே துறையின் அறிவிப்பால் பொங்கிப்போன வாடிக்கையாளர்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் கடும் வைரலாகி இருக்கிறது. திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொங்கல் பார்சல் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அதில் 50 கிராம் பொங்கலுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.80 கட்டணமாகச் செலுத்தி இருக்கின்றனர். இதைக் குறித்து வெகுண்டு எழுந்த வாடிக்கையாளர்கள் 50 கிராம் பொங்கலுக்கு 80 ரூபாயா என ஓடும் ரயிலிலேயே சிலர் கேள்வியையும் எழுப்பி இருக்கின்றனர்.
தற்போது இந்தத் தகவல் இணையத்திலும் கடும் வைரலாகி இருக்கிறது. இதற்கு தெற்கு ரயில்வே ஒரு விளக்கத்தையும் வெளியிட்டு இருக்கிறது. ஆனால் பொங்கல் விவகாரம் இதோடு முடிந்து விடும் என எதிர்ப்பார்த்த நிலையில் மேலும் அந்தத் தகவல் பொங்கல் வாடிக்கையாளர்களை கடும் சூடாக்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரயில்வே வெளியிட்ட அந்த விளக்கத்தில், “ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் நடமாடும் உணவு பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பயணிகளுக்கு பார்சல் செய்யப்பட்ட சிப்ஸ், பிஸ்கட் மற்றும் தண்ணீர், தேநீர் போன்ற உணவு வகைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுதவிர ஐ.ஆர்.சி.டி.சி அனுமதி பெற்ற உணவு நிறுவனம் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பாதுகாப்பான முறையில் வழங்கப்படுகிறது. அதன்படி 61 கிராம் பார்சல் செய்யப்பட்ட பொங்கல் வழங்கப்படுகிறது.
அதன்படி பார்சல் செய்யப்பட்டு கொடுக்கப்பட்ட உணவில், சூடான நீரை ஊற்ற வேண்டும். பிறகு 8 நிமிடம் கழித்து பார்த்தால் 220 முதல் 230 கிராம் உணவாக அது கிடைக்கும். இந்த வழிமுறை பார்சல் செய்யப்பட்டுள்ள உணவின் மேல் பகுதியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது” மேலும் இந்தப் பொங்கல் 6 மாதங்கள் வரையிலும் கெட்டுப் போகாது என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆனால் ரயில்வே துறையின் இந்த விளக்கத்தைப் பார்த்த பலருக்கும் மேலும் கோபம் தலைக்கேறி இருக்கிறது. காரணம் சூடான தண்ணீரை ஊற்றினால் எப்படி 50 கிராம் பொங்கல் 220 கிராமாக மாறும். அதுமட்டுமல்லாது சூடான தண்ணீருக்கு ரயிலில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் எங்கே போவார்கள். அதோடு ஒரு வேகவைத்த பொங்கலை எப்படி 6 மாதம் வரையிலும் கெட்டுப் போகாமல் வைத்திருக்க முடியும். அப்படி முடிந்தாலும் பதப்படுத்தப் பட்ட உணவு எப்படி உடலுக்கு நன்மை பயக்கும்.
இப்படி பல சந்தேகங்களை வாடிக்கையாளர்கள் ரயில்வே துறையிடம் வைத்து வருகின்றனர். இந்தத் தவல்கள் தற்போது இணையத்தில் கடும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments