இன்றும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் 527 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இன்றும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகத்தில் மொத்தம் 508 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் 279 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4058ஆக உயர்ந்துள்ளது என்பதும் சென்னையில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2008ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சென்னையை அடுத்து கடலூரில் 68 பேர்களும், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 38 பேர்களும், விழுப்புரத்தில் 25 பேர்களும், திருவள்ளூரில் 18 பேர்களும், நாமக்கல்லில் 15 பேர்களும், திண்டுக்கல்லில் 7 பேர்களும், திருப்பத்தூரில் 5 பேர்களும், தர்மபுரி, காஞ்சிபுரம், பெரம்பலூர், சேலம், தென்காசி, நெல்லை, திருச்சி மற்றும் விருதுநகரில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 11,858 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மொத்தம் 174,828 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு இருவர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது.

More News

கொரோனா பணிக்கு சென்ற பெண் போலீஸ் பீச் ரோட்டில் மரணம்

நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேருந்து தவிர சாலைகளில் கிட்டத்தட்ட அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன.

தலைக்கனத்துடன் இருந்தால் தவிடுபொடி ஆகிவிடுவீர்கள்: மத்திய அரசுக்கு கமல் எச்சரிக்கை

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் பரபரப்பு, ஊரடங்கு, பசிபட்டினி என்ற பரபரப்பு இருந்து வரும் நிலையில் மத்திய அரசு சத்தமில்லாமல் தமிழகத்திற்கு எதிரான ஒருசில வேலைகளை செய்து வருவதாக தமிழக அரசியல் கட்சி

கொரோனா சிகிச்சையில் வெற்றிபெற்ற Remdesivir!!! மருந்து தயாரிப்பில் இந்தியா முதற்கட்ட வெற்றி!!!

டந்த மாதத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்: முதல்வருக்கு விஜயகாந்த் அறிவுரை

வரும் 7ஆம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரிகள் திறப்பது குறித்த மத்திய அமைச்சரின் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல தேர்வுகள் பள்ளி அளவில் நடை பெறவில்லை