டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 504 தங்கக்கட்டிகள்!!! பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

 

டெல்லி ரயில்வே நிலையத்தில் நேற்று வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 504 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை கடத்துவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் தொடர்ந்து கண்காணிப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

உளவுத்துறை கொடுத்தத் தகவலின்பேரில் நேற்று டெல்லி ரயில்வே நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தச் சோதனையில் கூட்டமாக வந்த 8 பயணிகளின் உடைகளில் இருந்து 504 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மொத்த எடை 83.621 கிலோ என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.42.89 கோடி இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து முறைகேடாகத் தங்கத்தைக் கடத்திக் கொண்டுவந்த 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றனர். தங்கக்கட்டிகள் அனைத்து விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.