டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 504 தங்கக்கட்டிகள்!!! பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

 

டெல்லி ரயில்வே நிலையத்தில் நேற்று வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 504 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை கடத்துவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் தொடர்ந்து கண்காணிப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

உளவுத்துறை கொடுத்தத் தகவலின்பேரில் நேற்று டெல்லி ரயில்வே நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தச் சோதனையில் கூட்டமாக வந்த 8 பயணிகளின் உடைகளில் இருந்து 504 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மொத்த எடை 83.621 கிலோ என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.42.89 கோடி இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து முறைகேடாகத் தங்கத்தைக் கடத்திக் கொண்டுவந்த 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றனர். தங்கக்கட்டிகள் அனைத்து விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

More News

சுரேஷ் ரெய்னாவை அடுத்து தீபக் சஹாரும் நாடு திரும்புகிறாரா? என்ன ஆச்சு சிஎஸ்கே அணிக்கு?

2020ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணி வீரர்களும் சமீபத்தில் துபாய் சென்றுள்ளனர்.

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான மாப்பிள்ளை

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த இளைஞர் ஒருவர், தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மனிதக்கடவுளுக்கே எங்கள் ஓட்டு: 'பிகில்' பாணியில் முதல்வருக்கு மாணவர்களின் முழுபக்க விளம்பரம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும்

நாடு திரும்புகிறார் முன்னணி சிஎஸ்கே வீரர்: ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதாக தகவல்!

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும்

தென்கொரிய விமான நிலையத்தில் திடீரெனச் சுருண்டு விழுந்து இறந்த இந்திய மாணவி- பரபரப்பு தகவல்!!!

தென்கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்துவரும் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தென்கொரிய விமான நிலையத்தில் திடீரென சுருண்டு விழுந்து