டெல்லியை நோக்கி 50 ஆயிரம் விவசாயிகள்… கடும் குளிருக்கு இடையிலும் முற்றும் போராட்டம்!!!

  • IndiaGlitz, [Friday,December 11 2020]

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு வேளாண் சட்டத்தில் புதிய திருத்த மசோதாவை கொண்டு வந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கால் இதுகுறித்து பெரிய அளவிலான போராட்டம் எதுவும் எழுப்பப் படவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் பஞ்சாப், ஹரியாணா, ஒரிசா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் புதிய வோளாண் சட்டத்தை திரும்ப பெறுமாறு வலியுறுத்தி கடுமையான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு போராட்டம் நடத்திவரும் ஒருங்கிணைப்பு தலைவர்களிடம் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்தது. ஆனால் பேச்சு வார்த்தையில் இறுதியான முடிவுகள் எட்டப் படவில்லை. அடுத்தக் கட்டமாக விவசாய சங்கத் தலைவர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதிலும் திருப்திகரமான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

இதையடுத்து நாடு முழுவதும் வோளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தற்போது 16 ஆவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்தில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி பயணிப்பதாகக் கூறப்படுகிறது. வோளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக பஞ்சாப் விவசாயிகள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாபில் உள்ள பல மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் 1200 டிராக்டர்களில் ஆறு மாதங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 16 ஆவது நாளாகத் தொடரும் இந்தப் போராட்டத்தில் ஹரியாணா, உத்திரப்பிரதேசத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வலுப்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் நாளை மாலைக்குள் ஹரியாணாவில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட தயாராக இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இதையடுத்து உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் உள்ள போராட்டக் குழுக்கள் தற்போது நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல் பகுதிகளுக்கு சென்று அங்கு முழக்கங்களை எழுப்புவதாகவும் கூறப்படுகிறது. இதுபோல நாட்டில் உள்ள அனைத்து டோல்களிலும் போராட்டங்களை வலுப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. கடும் குளிருக்கு இடையிலும் 16 ஆவது நாளாகத் தொடரும் விவசாயிகளின் புதிய வோளாண் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறும் போராட்டத்திற்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More News

பெண்களுக்கும் Fitness ரொம்ப அவசியம்… உற்சாகப்படுத்தும் வைரல் வீடியோ!!!

பொதுவாக உடல் தகுதி என்பது ஆண்களுக்கு மட்டும்தான் எனும் கருத்து இருந்து வருகிறது. இதில் பெண்களுக்கான உடற்பயிற்சி,

'ஈஸ்வரன்' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட சிம்பு!

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது

அற்ப காரணம், தூக்கில் தொங்கிய கணவன் - மனைவி: அனாதையான 2 பெண் குழந்தைகள்!

காஞ்சிபுரத்தில் அற்ப காரணத்தினால் கணவன் மனைவி ஆகிய இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இந்த தம்பதியின் இரண்டு மகள்கள் அனாதையாக

ரஜினி பிறந்த நாளில் டைட்டில்-பர்ஸ்ட்லுக் ஏன்? யுவன் போட்ட புதிர்!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்கும் திரைப்படம் ஒன்றின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில்

அமெரிக்காவின் கதையை மாற்றிய இருவர்… டைம் இதழின் புதிய கவுரம்!!!

உலகின் பிரபல பத்திரிக்கையான டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மனிதர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவித்து வருகிறது.