கொரோனா எதிரொலி: சென்னையில் 500 கிலோ சிக்கன் பக்கோடா இலவசம்

சென்னை ஆலந்தூரில் இலவசமாக 500 கிலோ சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டன என்பதும் இதனை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் இருவர் கோழிக்கடை நடத்தி வந்தனர். கோழிக்கறியில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவியதால் இவர்களுக்கு விற்பனை மந்தமாக இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் கோழிக்கறியில் இருந்து பரவவில்லை என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக 500 கிலோ கோழிக்கறியில் இருந்து செய்யப்பட்ட சிக்கன் பக்கோடவை பொதுமக்களுக்கு இலவசமாக இந்த கடைக்காரர்கள் வழங்கினார்கள். இதனை ஏராளமானோர் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

இதனை அடுத்து கோழிக்கறியில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை என்ற விழிப்புணர்வு தற்போது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இனிமேல் தங்களுடைய வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்த கடையை நடத்தி வருபவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக சென்னையை அடுத்த பொன்னேரி என்ற பகுதியில் 1 கிலோ சிக்கன் பிரியாணி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மேலும் 2 விவிஐபிகளை தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல் 

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பொதுமக்களை மட்டுமின்றி அரசியல்வாதி மற்றும் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

கொரோனா அச்சம்!!! கைகுலுக்கலைத் தவிர்த்த உலகப் பிரபலங்கள்; சுவாரசியமான தருணங்கள்!!!

ஒருவரின் கைகளை இன்னொருவர் இறுக்கமாகப் பிடித்து குலுக்கி தனது அன்பையும் வணக்கத்தையும் தெரிவிப்பது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படும் ஒரு வழக்கம்.

நாளை இசை வெளியீடு, இன்று 'வாத்தி ரெய்டு': விஜய் ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6.30 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது

கொரோனாவிற்கு மருந்து??? மாட்டுக் கோமியம் அருந்திய இந்து மகா சபையினர்!!! வைரலாகும் வீடியோ

கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை எந்தத் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகளும் தடுப்பு வழிமுறைகளும் தொடர்ந்து

போலி Hand Sanitizer பறிமுதல்!!! ஹரியாணா மாநில அதிகாரிகள் நடவடிக்கை!!!

இந்தியாவில் கொரோனாவில் பாதிப்பு எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும், 2 உயிரிழப்பு ஏ