500 டான்சர்களுடன் 'தளபதி 69' பாடல் படப்பிடிப்பு.. பாடலாசிரியர், பாடகர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த பாடல் படப்பிடிப்பு சம்பந்தமான சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

’தளபதி 69’ படத்தின் பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பாடலை விஜய் நடித்த ’லியோ’ படத்தில் இடம்பெற்ற ’நான் ரெடி’ பாடலை எழுதிய அசல் கோலார் எழுதி இருப்பதாகவும் இந்த பாடலை தளபதி விஜய் பாடி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த பாடல் மிகவும் பிரமாண்டமாக 500 டான்சர்களுடன் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் திரையில் பார்ப்பதற்கு இந்த பாடல் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் இந்த பாடல் டைட்டில் ’ஒன் லாஸ்ட் சாங்’ என்றும் கூறப்பட்டு வருகிறது.

அனிருத் கம்போஸ் செய்தாலே அந்த பாடல் திரையரங்கில் ரசிகர்களை எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்ற நிலையில் இந்த பாடலும் அதே போன்று இருக்கும் என்றும் தளபதி விஜய் குரலில் உருவாகும் இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.