திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? 50 வயது மணிரத்னம் பட நடிகை விளக்கம்!
- IndiaGlitz, [Thursday,December 01 2022]
மணிரத்னம் படத்தில் நடித்த 50 வயது நடிகை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மணிரத்தினம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’உயிரே’ என்ற திரைப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியவர் நடிகை மலைக்கா அரோரா. இவர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1998ஆம் ஆண்டு அர்பாஸ் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மலைக்கா அதன்பின் அவரை விவாகரத்து செய்துவிட்டார். இந்த நிலையில் போனிகபூர் மகன் அர்ஜுன் கபூரை மலைக்கா காதலித்து வருவதாகவும் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென மலைக்கா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி அதிர்ச்சி அடைந்த மலைக்கா தான் கர்ப்பம் என வெளிவந்துள்ள செய்திகளில் உண்மை இல்லை என்றும் இது போன்ற செய்திகள் எப்படி வெளியாகின்றன என்றும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்த செய்தி குறித்து தனது ஆதங்கத்தை நடிகர் அர்ஜூன் கபூரும் வெளிப்படுத்தியுள்ளார்.