உலகம் முழுவதும் போற்றப்பட்ட ஒரு உன்னத முத்தம்? சுவாரசியப் புகைப்படம் வைரல்!
- IndiaGlitz, [Wednesday,July 07 2021]
உலகம் முழுவதும் நேற்று (ஜுலை 6)ஆம் தேதி சர்வதேச முத்தத்தினம் கடைப்பிடிக்கப் பட்டது. இந்த நாளில் ஒரு நபர், மற்றொரு நபருக்கு கொடுக்கும் முத்தப் புகைப்படம் 50 ஆண்டுகளுக்கு பின் சோஷியல் மீடியாவில் படு வைரலாகியது.
அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான ஜாக்சான் வேலி ஜார்னல் பத்திரிக்கையில் பணியாற்றி வந்த ரோக்கோ மொரபிடோ எனும் புகைப்பட கலைஞர் கடந்த 1967 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தனது காரில் எப்போதும் போல பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது தெருவின் ஓரம் உள்ள மின் கம்பத்தில் தொங்கியபடியே ஒரு ஊழியர் மற்றொரு ஊழியருக்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.
இதையடுத்து உடனே சுதாரித்துக் கொண்ட ரோக்கோ காரில் உள்ள ரேடியோ வழியாக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தார். மேலும் தனது காரில் இருந்த கேமராவை எடுத்து உடனே அந்தக் காட்சியை க்ளிக் செய்தார். இந்தக் காட்சி பின்னாட்களில் புலிஸ்டர் விருதை பெற்று உலக மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் சோஷியல் மீடியா இல்லாத அந்தக் காலத்திலேயே இந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் கவனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
அதாவது மின்கம்பத்தில் பணியாற்றியபோது ராய்டல் ஜி என்ற நபரை மின்வெட்டு தாக்கி இருக்கிறது. இதனால் மூச்சிரைத்து போன அவரை அருகில் இருந்த ஜேடி தாம்ஸன் காப்பாற்ற முயற்சித்து இருக்கிறார். மேலும் பேச்சு மூச்சு இல்லாத ராய்டல் ஜிக்கு சிபிஆர் முறையில் தனது வாயில் இருந்து ஆக்சிஜனை அவருக்கு கொடுத்து இருக்கிறார். இந்தக் காட்சிகளை ரோக்கோ கட்சிதமாகப் படம் பிடித்து இருக்கிறார். இதனால் ரோக்கோ தலைப்பு செய்திகளில் இடம்பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேலை நேரத்தில் இறந்து கொண்டு இருந்த தனது நண்பனை ஜேடி தாம்ஸன் மிகத் திறமையாகக் காப்பாற்றிய இந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. மேலும் இந்தப் புகைப்படத்தை எடுத்த ஜேடி ரோக்கோ உலகப் புகழ்ப்பெற்ற புகைப்படக் கலைஞர் ஆனார்.
நொடிப்பொழுதில் நடந்து மறைந்து போகும் காட்சிகளை புகைப்படங்கள் மிக அழகாகக் காட்சிபடுத்தி விடுகிறது. அந்த வகையில் “The kiss of life“ புகைப்படம் கடந்த 1968இல் ஸ்பாட்லைட் பேட்டோகிராபி பிரிவில் புலிட்சர் பரிசு தட்டிச் சென்றது. அதோடு சர்வதேச முத்தத்தினத்தில் மீண்டும் இந்தப் புகைப்படம் கவனம் பெற்றிருக்கிறது.