பள்ளி திறந்து சில தினங்களில் எகிறிய கொரோனா பாதிப்பு… மீண்டும் விடுமுறை!!!

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

 

கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு கல்வி நிறுவனங்களின் நடைமுறை பெரும் அளவிற்கு மாறிவிட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ள நிலையில் கர்நாடக அரசு ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு சில தினங்களே ஆன நிலையில் திறக்கப்பட்ட 26 பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

காரணம் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகளில் இதுவரை 52 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்து உள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பள்ளிகளுக்கு வந்த மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிக பாதிப்பு இருப்பதாகக் கருதப்படும் 26 பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வெறுமனே 3 நாட்களில் இத்தனை பாதிப்பா எனப் பெற்றோர்களும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான கருத்து கணிப்பு கேட்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளிவரலாம் எனக் கூறப்படுகிறது.

More News

ஐந்தாவது சுற்று முடிவில் யார் யாருக்கு எத்தனை புள்ளிகள்!

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் ஃபினாலே டாஸ்க்கில் ஏற்கனவே 4 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஐந்தாவது சுற்றில் ரியோ வெற்றி பெற்றதால் அவருக்கு 7 புள்ளிகள் கிடைத்தது

அந்த டாக்டர் ஏன் இவர்களுக்கெல்லாம் லட்டர் எழுதவில்லை? 'காட்டேரி' இயக்குனர் கேள்வி

பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' மற்றும் சிம்புவின் 'ஈஸ்வரன்' ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு அரசாணை

வறுமையின் உச்சம்... நெஞ்சை பிழியும் வைரல் புகைப்படம்!!!

கொரோனா காலத்தில் ஆப்பிரிக்க நாடுகள் மட்டும் அல்ல அரபு நாடான ஏமனிலும் கடுமையான வறுமை நிலவி வருகிறது

தயவுசெய்து மருத்துவரை பாருங்கள்: விமர்சனம் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகர்!

சமூக வலைதளங்கள் மூலம் தன்னை விமர்சனம் செய்த ரசிகரை 'தயவுசெய்து மருத்துவரை பாருங்கள்' என்று நடிகர் ஒருவர் அட்வைஸ் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நடிகரை புகழ்ந்து புகழ்ந்து வாயே வலிக்குது: நெட்டிசன்கள் புலம்பல்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் அனைத்து இந்திய மக்களின் மனதிலும் ஹீரோவாக புகழப்பட்டவர் வில்லன் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே.