பள்ளி திறந்து சில தினங்களில் எகிறிய கொரோனா பாதிப்பு… மீண்டும் விடுமுறை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு கல்வி நிறுவனங்களின் நடைமுறை பெரும் அளவிற்கு மாறிவிட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ள நிலையில் கர்நாடக அரசு ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு சில தினங்களே ஆன நிலையில் திறக்கப்பட்ட 26 பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
காரணம் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகளில் இதுவரை 52 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்து உள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பள்ளிகளுக்கு வந்த மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிக பாதிப்பு இருப்பதாகக் கருதப்படும் 26 பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வெறுமனே 3 நாட்களில் இத்தனை பாதிப்பா எனப் பெற்றோர்களும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான கருத்து கணிப்பு கேட்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளிவரலாம் எனக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout