கள் குடித்து ஒருவர்பின் ஒருவராக 5 பேர் உயிரிழந்த சோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர மாநிலத்தில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளைக் குடித்து பழங்குடியினர் 5 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள ராஜவொம்மாங்கி அடுத்த லோதொட்டி எனும் மலைக்கிராமத்தில் வசிக்கும் 5 பேர் நேற்று பனங்கள்ளைக் குடிக்கச் சென்றுள்ளனர். அந்தக் கள்ளை குடித்தப் பின்பு அவர்கள் ஒருவர்பின் ஒருவராக மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை அறிந்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று மாதிரிகளை சேகர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளை குடித்ததாலேயே 5 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கிராம வாசிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments