பெங்களூர் மதுபார் விடுதியில் தீவிபத்து: பெண் உள்பட 5 பேர் பலி

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

பெங்களூரின் மையப்பகுதியான கலாசிபாளையம் என்ற பகுதியில் இயங்கி வந்த மதுபான விடுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த ஐந்து பேர் உடல்கருகி பரிதாபமாக மரணம் அடைந்தனர். இவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்கி கொண்டிருக்கும் பகுதியான கலாசிபாளையம் பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த பகுதியில் உள்ள தனியார் பார் மற்றும் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ திடீரென நாலாபுறமும் பரவியதால் இந்த விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த ஐந்து பேர் விடுதியில் இருந்து வெளியேற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த விசாரணையில் இந்த தீவிபத்தில் மரணம் அடைந்தர்களின் அடையாளம் காணப்பட்டது. சுவாமி, பிரசாத், மகேஷ் (தும்கூர்), மஞ்சுநாத் (ஹசன்), கீர்த்தி (மாண்டியா) ஆகியோர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

More News

எனது டுவிட்டர் கருத்துக்கள் புரியாமல் இருப்பதும் நல்லதுதான்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டரில் ஆளும் அரசின் மீது விமர்சனங்களும், சமூக அவலங்களை எடுத்துரைக்கும் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

ரூ.300 கோடி பட்ஜெட் படத்தில் சீயான் விக்ரம்

கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசனுக்கு அடுத்து ஒரு கேரக்டருக்காக அதிகம் உழைப்பவர் விக்ரம் என்பது தெரிந்ததே.

ரசிகர்களுக்கு கமல் விடுத்த எச்சரிக்கை

சமீபத்தில் நடந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வெற்றி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சூர்யா 37' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

சூர்யா நடித்த 35வது படமான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர், பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

2வது வாரத்திலும் விறுவிறுப்பான வசூல் வேட்டையில் வேலைக்காரன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து விமர்சகர்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது.