சாலை விபத்து… நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தில் மீண்டும் சோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் பீஹார் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
“தோனி“ படத்தில் நடித்து இந்தியா முழுக்க பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020 ஜுன் 14 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்த வழக்கு ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் புரட்டிப் போட்டது. இந்நிலையில் தற்போது அவருடைய உறவினர்கள் 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங்கின் மைத்ததுனர் ஹரியாணா மாநிலத்தின் மூத்த காவல் துறை அதிகாரியாக (ஓம் பிரகாஷ் சிங்) பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரி கீதா தேவி உயிரிழந்த நிலையில் அவருடைய இறுதிச்சடங்கிற்கு பாட்னா மாநிலத்தில் உள்ள சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் 9 பேர் டாடா சுமோ காரில் சென்றுள்ளனர்.
பின்னர் ஹரியாணாவில் இருந்து திரும்பியபோது நேற்று மாலை பீஹார் மாநிலத்திலுள்ள லக்கிசராய் அடுத்த பிப்ராவி எனும் இடத்தில் தனக்கு முன்னாள் சென்றுகொண்டிருந்த கேஸ் லாரி மீது மோதியதில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உயிரிழந்த 6 பேரில் சுஷாந்த் சிங்கின் மைத்துனர் லலித் சிங், அவருடைய மகன்கள் – அமித் சேகர், ராம் சந்திர சிங், மகள்கள்- பேபி தேவி, அனிதா தேவி ஆகியோர் அடங்குவர். இவர்கள் சுஷாந்த் சிங் நேரடி குடும்பத்தினர் இல்லையென்றாலும் நெருங்கிய உறவினர்கள். மேலும் டிரைவர் பிரிதம் குமாரும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments