OPS-ஐ கவிழ்க்க OPS-ஐ இறக்கிய அதிமுக? யார் செய்ய சொன்னது? கசியும் தகவல்கள்.

  • IndiaGlitz, [Wednesday,March 27 2024]

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து அதே பெயரை வைத்துள்ளவர்கள் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்யுள்ளது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேரடியாக களம் காண்பதால் அங்கு வெற்றி வாய்ப்பு அவருக்கு அதிகம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பிரமுகர் ஒருவர் வெளிப்படையாக உள்ளடி வேலையை பார்த்திருப்பது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழகம் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். தனிச் சின்னத்தில் போட்டியிட போவதாக அறிவித்து தன்னுடைய பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.

அதேசமயம், அவர் போட்டியிடும் அதே தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் எனப் பெயர் உடைய மேலும் ஐந்து நபர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது இதற்கு பின்னால் இருப்பது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக மதுரையை சேர்ந்த விவசாயி ஒருவர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தபோது உடனிருந்தது அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிங்கராஜ பாண்டியன் என்பதும், ஓ.பன்னீர்செல்வம் என பெயர் உள்ளதால் அவரை அழைத்து வந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய சொன்னதும் அவர்தான் என தகவல் கசிந்துள்ளது. இவர் முன்னாள் அமைச்சரும் அதிமுக முக்கிய தலைவருமான ஆர்.பி. உதயகுமாரின் தீவிர ஆதரவாளர் என்பது கூடுதல் தகவல்.

இது ஒருபுறம் இருக்க ராமநாதபுரம் தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தங்கச்சிமடம் சூசையப்பன் பட்டினத்தில் மீனவர்களிடத்தில் பேசினார். அப்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க உதவுமாறு உறவினர்கள் மற்றும் ஊர்காரர்கள் கதறி அழுது கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஓபிஎஸ், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல் முருகனையும் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பிரச்சார காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த துரித நடவடிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று பேசுப்பொருளாக மாறி உள்ளது.

 

More News

1461 நாள் ஆயிருச்சு.. நடிகர் சேதுராமன் நினைவு நாளில் மனைவியின் உருக்கமான பதிவு..!

மறைந்த நடிகர் சேதுராமனின் நினைவு நாளை அடுத்து அவரது மனைவி உமா தன்னுடைய சமூக வலைதளத்தில் அவரை பிரிந்து 1461 நாட்கள் ஆகிவிட்டது என்று உருக்கமாக பதிவு செய்துள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது.

'சுந்தரி' சீரியல் நடிகருக்கு திருமணம்.. மணமகளும் சீரியல் நடிகை தான்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' சீரியலில் நடிக்கும் நடிகருக்கு இன்று திருமணம் ஆகி உள்ள நிலையில் மணமகளும் ஒரு சீரியல் நடிகை தான் என்பதை அடுத்து சின்னத்திரை உலகினர்

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் அசோக்செல்வன் அடுத்த படம்.. தேதி அறிவிப்பு..!

கடந்த சில ஆண்டுகளாக நேரடியாக ஓடிடியில் படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் அசோக் செல்வன் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அது குறித்த ட்ரெய்லர் வீடியோவும்

இன்று காலை நடிகர் சித்தார்த்துக்கு திருமணமா? மணமகள் யார்?

இன்று காலை நடிகர் சித்தார்த் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ திரைப்படம்.. 'அரண்மனை 4' நடிகை தான் ஹீரோயின்..!

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கோத்ரா ரயில் இருக்கு சம்பவம் நடந்தது என்பதும் இந்த சம்பவம் குறித்து ஒரு சில திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது