ஒரே வாரத்தில் 5 படங்கள்: காற்றில் பறக்கவிடப்பட்ட விதிமுறைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் விதிக்கப்பட்ட விதிகளில் ஒன்று ஒவ்வொரு வாரமும் திரைப்பட வெளியிட்டு குழுவின் அனுமதி பெற்று 3 அல்லது 4 படங்கள் மட்டுமே வெளியாகும் என்பது. இந்த விதி அவ்வப்போது தளர்த்தப்பட்ட நிலையில் வரும் கிறிஸ்துமஸ் வாரத்தில் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, தனுஷின் ‘மாரி’, ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’, விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என 5 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புதிய திரைப்படங்களின் வெளியீட்டுக் குழு கடந்த 5-ம் தேதி கூடியது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வருகிற 14-ம் தேதி நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், ஒருசில திரைப்படங்கள் வெளிவரலாம் என்று பேசப்பட்டது. மேலும், ஒரே தேதியில் நிறைய படங்கள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்சினை மற்றும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது. ஆனால், எந்தத் தயாரிப்பாளரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், வருகிற டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10-ம் தேதிகளில், தங்களது படங்கள் வெளிவர வேண்டும் என தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர். அப்படி வெளிவந்தால் தங்களுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது என்று முடிவெடுத்து, அவர்கள் விரும்பி கேட்டுக் கொண்டதன் பேரில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறையில் தயாரிப்பாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களின் படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தேதிகள் தவிர்த்த மற்ற நாட்களுக்கான படங்களின் வெளியீடு குறித்த முடிவுகள், வரும் வாரம் நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்துக்குப் பின்னர் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout