மாலத்தீவே தோற்கும்… இந்தியாவில் இருக்கும் 5 அழகான தீவுகள்… பட்ஜெட் சுற்றுலா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக சினிமா பிரபலங்கள் பலரும் பெரிய பெரிய கடற்கரை பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள ரிசார்டில் வசதியாகத் தங்கிவிட்டு அவ்வபோது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதைப் பார்க்கும் சாதாரண மக்களுக்கு நம்மால் இவ்வளவு செலவு செய்து ஊர் சுற்ற முடியுமா? என்ற சந்தேகம் வருகிறது. உண்மையில் இந்தியாவிற்கு உள்ளேயே குறைந்த செலவில் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு பல அழகான தீவுகள் இருக்கின்றன.
நகரத்தின் இரைச்சலை விட்டு நீண்ட தூரத்தில் அழகான பசுமையோடு, காட்சி அளிக்கும் இத்தகைய தீவுகளுக்கு செல்வதால் பெரிய அளவிற்கு செலவு செய்ய வேண்டிய தேவையிருக்காது. மேலும் நீளமான மரங்கள், வெதுவெதுப்பான மணல் என்று அதன் அழகை ரசிக்கவும் முடியும்.
மஜுலி தீவு – அசாம் மாநிலத்திலுள்ள இந்த தீவு ஒரு ஆற்றுத் தீவு என்றே அழைக்கப்படுகிறது. காரணம் இதன் நான்கு புறங்களிலும் பிரம்மப்புத்திரா நதி சூழ்ந்து ஒட்டுமொத்த இயற்கை அழகும் இங்கு கொட்டி கிடக்கிறது. அசாம் தலைநகர் குவஹாட்டியில் இருந்து 350 கிமீ தொலைவிலுள்ள இந்த தீவானது நகரத்தின் இரைச்சலே இல்லாமல் ஒரு அமைதியான விடுமுறைக்கு ஏற்ற இடமாகக் காணப்படுகிறது.
மேலும் பாசி படர்ந்த அதன் நிலப்பரப்பில் படகு ஓட்டியும் அதன் இயற்கை அழகை ரசிக்க முடியும். இந்த இடத்தைப் பார்க்கும் பலரும் இயற்கை அன்னையின் மூச்சடைக்கக்கூடிய ஓவியம் என்றுதான் கூறுகின்றனர். மஜுலி தீவுகளை ஒட்டி பணக்கார அசாம் கலாச்சாரம் அடங்கிய வீடுகளையும் பார்க்க முடியும்.
திவார் தீவு- இந்தியாவை பொறுத்தவரைக்கும் கோவா மிகச் சிறந்த சுற்றுலா தலமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த கோவாவில் ஒளிந்திருக்கும் மற்றொரு பொக்கிஷம்தான் திவார் தீவு. இன்னும் பிரபலமடையாமல் இருக்கும் இந்தத் தீவில் வெறுமனே கடற்கரை மட்டுமல்ல… அழகான மலைத் தொடர்களும் காணப்படுகிறது.
ஆள் அரவம் இல்லாத அமைதியான நிலப்பரப்பு, வளைந்த சாலைகள், புனித யாத்திரைகள், சில கட்டிகலைகள் அடங்கிய கோபுரங்கள் என்று இதன் இயற்கை அம்சம் பார்ப்போரை மயங்க வைத்து விடும் தன்மை கொண்டது. இந்த தீவார் தீவில் ஆங்காங்கே கிராமங்களும் காணப்படுகிறது. அதிலும் மலைகளும் கடற்கரையும் ஒட்டிய பகுதி இயற்கை அன்னைக்கே பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்த ஒன்று.
செயின்ட் மேரி தீவுகள்- கர்நாடகா மாநிலம் உடுப்பியில் அமைந்திருக்கும் அழகிய தீவு. சுற்றுலா தளமாக இன்னும் பிரபலம் அடையாமல் இருக்கும் இந்த இடம் பட்ஜெட்டில் ஊர் சுற்றிப் பார்ப்பவர்களுக்கு ஏற்ற ஒன்று.
இந்தியாவிற்கு வந்த வாஸ்கோடாகாமா தனது முதல் காலடியை பதித்த இடம் இதுதான். அந்த வகையில் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இந்தத் தீவு கருதப்படுகிறது. மேலும் வெள்ளை மணல் கடற்கரைகள், படிகப் பாறைகள், வனவிலங்குகள் என்று ஆளையே மயக்குகின்ற அளவிற்கு பல்வேறு அதிசயங்களைக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தத் தீவை புவியியல் புதையல் என்று சிலர் அழைக்கின்றனர்.
அரேபிய கடலிலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் இருக்கும் இந்தத் தீவானது தென்னை தீவு, வடக்கு தீவு, தெற்கு தீவு, தர்யாபகதுர்கா தீவு என்று 4 தனித்தனித் தீவுகளின் இணைப்பாகவே இருக்கிறது. இதனால் இயற்கை விரும்பிகளுக்கு ஒரு பொக்கிஷமாக இது இருக்கும்.
கிராண்ட் தீவு அல்லது பேட் தீவு- கோவாவில் இருக்கும் மற்றொரு இயற்கை பொக்கிஷம்தான் இந்த கிராண்ட் திவு. கோவா கடற்கரையில் இருந்து படகில் அழைத்துச் செல்லப்படும் இந்த தீவு பயணத்திற்கு குரங்கு கடற்கரை பயணம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த தீவானது வெறுமனே கடற்கரை மணலுக்காக மட்டுமல்ல அழகான நீர் விளையாட்டு, மீன் பிடித்தல் மற்றும் கடல் உணவுகளை சுவைத்து சாப்பிடுவதற்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.
மேலும் ஸ்நோர்கெலிங் போன்ற ஒரு சில விளையாட்டுகளிலும் இங்கு ஈடுபடலாம். இந்த கிராண்ட் தீவில் அகுவாடா கோட்டை, வணிகர் பங்களா, மத்திய சிறை என்று பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன.
டையூ தீவு- குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா தீபகற்பத்தின் ஜுனாகத் அருகே உள்ள டையூ மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த தீவு வெறும் 38.8 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குட்டி தீவு. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் சாலை வழியாக இது இணைக்கப்பட்டு இருக்கிறது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளும் இதில் இணைந்துள்ளது. இந்த தீவிற்கு ரயில் போக்குவரத்து இல்லை. ஆனால் தீவை இரண்டு பாலங்களை கொண்டு நிலப்பரப்புடன் இணைத்திருக்கிறார்கள்.
போர்த்துக்கீசிய காலக்கப்பட்டத்தின் பல்வேறு அம்சங்களை இந்த டையூ தீவில் இன்றைக்கும் பார்க்க முடியும். அந்த வகையில் பல தனியார் மற்றும் அரசு கட்டிடங்கள் இங்கு காணப்படுகின்றன. மேலும் தேவாலயம், அருங்காட்சியகம், விருந்தினர் மாளிகை என்று ஒட்டுமொத்த அம்சமும் பழைமையை காட்சிப்படுத்துகிறது.
இதன் கடற்கரை மற்ற கடற்கரையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. காரணம் இது சதுப்பு நிலம் மற்றும் உப்பு நிலங்களை கொண்டது என்பதால் நீர்பறவைகள் அதிகமாக இங்கு தஞ்சம் புகுந்திருக்கின்றன. சுண்ணாம்பு பாறைகள், மணல் கடற்கரைகள், மீன்பிடி கிராமம் என்று ஓய்வெடுக்கவும் இயற்கை அழகை ரசிக்கவும் சிறந்த இடம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments