தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா!!! பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு!!!

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று கொரோனா பாதிப்பினால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சேலத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதைத் தற்போது உறுதிசெய்துள்ளார். மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதாக நேற்று அறிவித்த நிலையில் இன்று சேலத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் முறையான பாதுகாப்புகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

More News

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!!! நேற்று தேர்வு எழுதத் தவறிய மாணவர்களுக்கு மறுத்தேர்வு!!!

தமிழகத்தில் நேற்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கப்பட்ட நிலையில் பெரும்பாலா

கொரோனாவின் உச்சம்!!! ஸ்பெயினில் அனாதையாக இறந்துகிடந்த முதியவர்கள்!!!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள ஸ்பெயின் நாட்டில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது.

இந்தியாவில் இறந்த 3 மாத மகனை பார்க்க மஸ்கட்டில் இருந்து கண்ணீர் விடும் தந்தை

மஸ்கட்டில் இருக்கும் தந்தை ஒருவர் இந்தியாவில் மரணம் அடைந்த தனது 3 மாத மகனை கடைசியாக ஒருமுறை பார்க்க உதவி செய்யும்படி அழுதுகொண்டே டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் வீடியோவை பார்க்கும்போது கண்ணீரை

கொரோனா அச்சத்தால் பிளஸ் 2 தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்கள்: மறுதேர்வு வைக்கப்படுமா?

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்று வெளியான செய்தியை பார்த்தோம்.

எல்லா வசதி இருந்தும் ஏன் வீட்ல இருக்க மாட்டேங்குறீங்க: ரித்விகா

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகை ரித்விகா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: