தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா!!! பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு!!!

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று கொரோனா பாதிப்பினால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சேலத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதைத் தற்போது உறுதிசெய்துள்ளார். மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதாக நேற்று அறிவித்த நிலையில் இன்று சேலத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் முறையான பாதுகாப்புகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.