கந்துவட்டி கொடுமை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கந்துவட்டி கொடுமைக்கு எதிராக சட்டம் இருந்தும், கந்துவட்டி கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகின்ற நிலையிலும் ஆங்காங்கே கந்து வட்டி கொடுமை நடந்து வருகிறது என்பதும், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை, கொலை போன்ற உயிரிழப்புகள் அவ்வப்போது நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையம் என்ற கிராமத்தில் கந்துவட்டி பிரச்சினையால் தச்சு தொழிலாளி மோகன் என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மோகன், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என மொத்தம் 5 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதால் விழுப்புரம் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட 5 பேரின் உடல்களை மீட்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout